இந்த கொடூர தொற்றைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரொனா விதிமுறைகளை மீறுபவர்களுக்குத் தண்டவையை கடுமையாக்க புதிய சட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்தச் சட்டம் விரைவில் தமிழகத்தில் அமலுக்கு வரும் எனத் தகவல் வெளியான் நிலையில், இந்தப் பொதுச் சுகாதாரத்துறைச் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே இது கூடியவிரைவில் அமலுக்கு வரும் என தெரிகிறது.