கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து திராவிட கட்சிகள் தீவிரமாக போராடியதால் மத்திய அரசு வேறுவழியின்றி இந்தி திணிப்பை தமிழகத்தில் நிறுத்தியது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு இந்தி திணிப்பு போராட்டம் மற்றும் தமிழுக்கு ஏற்படும் அவமானத்தை எதிர்த்து ஒரு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியில் எழுதுவது மட்டுமின்றி இந்திக்கு கீழே தமிழை எழுதி தமிழை அவமானப்படுத்துவதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து கூறியபோது, இந்திக்கு மகுடம் சூட்டுவோம், தமிழை மட்டம் தட்டுவோம் என பாஜக அரசு செயல்பட்டால் 'புதிய ”இந்தித் திணிப்பு” எதிர்ப்பு போராட்டத்தை சந்திக்க நேரிடும் என மத்திய அரசுக்கு எச்சரிக்கை செய்வதாக கூறியுள்ளார்.