கடும் குடிதண்ணீர் தட்டுப்பாடு.. காலி குடங்களுடன் முற்றுகையிட்டுள்ள கிராம மக்கள்..!

திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (12:08 IST)
நெல்லை மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நெல்லை மாவட்டத்தை சுற்றியுள்ள பல கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக கடந்த சில நாட்களாக புகார் எழுந்தது. நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லைதிருத்து, முனைஞ்சிப்பட்டி, பத்தினி பாறை ஆகிய பகுதிகளில்  குடிதண்ணீர் ஏற்பாடு செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
 
இதனை அடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மேற்கண்ட கிராமத்து மக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அசம்பாவிதம் ஏற்படாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  
 
குடிநீர் தட்டுப்பாடு உள்ள கிராமங்களில் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்