முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 41 நாட்கள் நிறைவடைந்த நிலையில், தமிழக அரசு மத்திய அரசின் உதய் திட்டத்திற்கும் , தேசிய உணவு பாதுகாப்பு சட்ட திட்டத்திற்கும் மிகப்பெரும் விலைகளைக் கொடுத்து சமரசம் செய்து இருக்கிறது. எம்.ஜி .ஆர் மருத்துவமனையில் இருந்த போது அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் ஹெக்டே தினம் பத்திரிகைகளுக்கு முதல்வர் நலம் குறித்து செய்திகள் தருவார். வீரப்பன், நெடுஞ்செழியன் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் களம் கண்ட நேரம் அது.