அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், எடப்பாடி அதிரடி நீக்கம்: இப்படி கூட அறிக்கை வரலாம்!

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (15:31 IST)
அதிமுகவிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை துணை முதல்வர் ஓபிஎஸ் அதிரடியாக நீக்கினார். மேலும் துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இருந்து நீக்கினார் என அறிக்கை வரும் காலத்தில் வரலாம் என தினகரன் அணியில் உள்ள நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
 
தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டு ஓபிஎஸ் அணியை இணைத்து ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் பதவியை அளித்து ஆட்சியை நடத்தி செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனாலும் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் வருவதாக செய்திகளில் கூறப்படுகிறது.
 
சில இடங்களில் ஈபிஎஸ் ஆதரவாளர்களும் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இந்நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதல் குறித்து பேசிய தினகரன் ஆதரவு பேச்சாளர் நாஞ்சில் சம்பத், எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் எங்களுக்குத் தான் வெற்றி கிடைக்கும்.
 
விரைவில் தீர்ப்பு வரும்போது அது தெரியும். எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே இருந்த மோதல் தற்போது அதிகரித்து உள்ளது. விரைவில் அவர்கள் இருவருமே தங்களையே மாற்றி மாற்றி கட்சியில் இருந்து நீக்கிக்கொள்வதாக அறிக்கை வெளியாகும் என்றார் நாஞ்சில் சம்பத்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்