பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் தீ பந்தம் வீச்சு! - பாஜக கட்சியினர் சாலை மறியல்!

திங்கள், 6 நவம்பர் 2023 (10:50 IST)
புதுவயல் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பாஜக 7 ஆவது வார்டு சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய அலுவலகம் மீது மர்ம நபர்கள் தீப்பந்ததை  வீசி விட்டு தப்பி சென்றனர்.



சிவகங்கை மாவட்டம், புதுவயல் பேரூராட்சியில் பாஜக ஐடிவிங் ஒன்றிய செயலாளர் ரமேஷ்  ”சாக்கோட்டை முழுவதும் பாஜக கொடி ஏற்றுவேன் என்றும் சாக்கோட்டை கிழக்கு ஒன்றியத்தில் பாஜக கொடி பறப்பதற்கு இடையூறாக இருந்தால் அது யாராக இருந்தாலும் சரி ஒரு திமுக கொடி கட்டிய கார் கூட சிவகங்கை மாவட்டத்தில் நுழைய முடியாது இது எச்சரிக்கை” என தமது முகநூலில் பதிவுட்டதிற்கு சாக்கோட்டை திமுக ஒன்றிய கழக செயலாளர் சின்னதுரை  ரமேஷுக்கு கால் செய்தும் மிரட்டியும் உள்ள  ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

அதனை தொடர்ந்து இன்று புதுவயல் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பாஜக 7 ஆவது வார்டு சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய அலுவலகம் மீது மர்ம நபர்கள் தீப்பந்ததை  வீசி விட்டு தப்பி சென்றனர்.

சற்று நேரத்தில் அங்கு குவிந்த பாஜக தொண்டர்கள் காவல்துறையினரிடம்  வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். திமுகவை சேர்ந்தவர் பெட்ரோல் குண்டு  வீசியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அப்பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியதற்கான  அடையாளம் ஏதும்  இல்லை என காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்