லக்கி மேன் எடப்பாடி... முரசொலியில் செம ரெய்டு!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (08:56 IST)
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் விமர்சித்து செய்தி வெளியாகியுள்ளது. 

 
தமிழகத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சியமைத்த நிலையில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அதிமுக கண்டனம் தெரிவித்தது. திமுகவை கண்டித்தும், மக்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றவும் வலியுறுத்தி நேற்று அதிமுக தமிழக அளவில் போராட்டத்தில் ஈடுபட்டது. 
 
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை எதிர்கட்சி தலைவர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலர் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து பதாதைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். 
 
இந்நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இதனை விமர்சித்து செய்தி வெளியாகியுள்ளது. அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது... ஜெயலலிதா மரணம் அடைந்தததால் - சசிகலா சிறைக்குப் போனதால் - பன்னீர் செல்வம் தர்மயுத்தம் என்ற நாடகக் கம்பெனி தொடங்கியதால் - முதல்வர் என்ற நாற்காலியை அடைந்தவர் பழனிசாமி. 
 
அரசியலில் சரியாகச் சொல்ல வேண்டுமானால் ‘லக்கி  ப்ரைஸ் லாட்டரி' பழனிசாமி என்று தான் சொல்லவேண்டும். அரசியலில் இவ்வளவு லக் வேறு யாருக்கும் கிடைத்தது இல்லை. உள்ளுக்குள் இருந்து பன்னீர்செல்வம் தரும் நமைச்சல், வெளியில் இருந்து சசிகலா தரும் குடைச்சல் ஆகிய இரண்டும் சேர்ந்து தமிழ்நாட்டு அரசியல்  தலைவர்களில் தாமும் ஒருவர் என காட்டிக்கொள்ளவும் தன்னையும் ஒரு ஆளாகக் காட்டிக் கொள்ளவும் திமுக மீது குற்றம்சாட்டி வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்