மாலை 5 மணி நிலவரப்படி 70.58% வாக்குகள் பதிவு.. 80% எட்டுமா?

திங்கள், 27 பிப்ரவரி 2023 (17:39 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 70.58% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இன்னும் ஒரு மணி நேரம் மீதம் இருக்கும் நிலையில் 80 சதவீத வாக்குகள் பதிவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து ஏராளமான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஒரு சில வாக்கு சாவடிகளில் திமுக அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டாலும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்றும் மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாலை ஐந்து மணி நிலவரப்படி 70.58% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் வாக்குப்பதிவு நிறைவடைய இன்னும் ஒரு மணி நேரம் இருக்கும் நிலையில் 80 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்த தொகுதியில் 66% வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.
 
இந்த நிலையில் இந்த முறை அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்