சென்னையில் விடிய விடிய மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

திங்கள், 10 ஜூலை 2017 (05:18 IST)
சென்னையில் நேற்று இரவு சுமார் 8 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய பெய்ததால் வெப்பத்தில் இருந்து விடுதலையான சென்னை மக்கள் குளிர்ச்சியுடன் காணப்பட்டனர்.



 
 
சென்னை உள்பட தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் நிலவிவந்ததால் பொதுமக்கள் பெரும் அவதியுற்றனர். மேலும் தண்ணீருக்கும் கஷ்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
 
இந்த நிலையில் நேற்று சென்னையின்  நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் , தி நகர், வடபழனி, விருகம்பாக்கம், அண்ணா நகர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி, அடையார், திருவான்மியூர், கிண்டி, சேப்பாக்கம், அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்பட  பல இடங்களில் பலத்த மழை பெய்தது. சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
மேலும் ஆந்திராவின் கடற்கரைப் பகுதியின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்