இப்பவே வெங்காய விலை தாறுமாறு… வேளாண் சட்டம் வந்தா..! – முக ஸ்டாலின் குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (11:14 IST)
தமிழகத்தில் வெங்காய பற்றாக்குறைக்கு காரணம் வெங்காயத்தை பதுக்கியதே என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வெங்காயம் பற்றாக்குறை ஏற்பட்டதால் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெங்காய விலையேற்றம் குறித்து பேசியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “வெங்காய விலை உயர்வு தாய்மார்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அதிமுக அரசு வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்து விற்பனை செய்தாலும் அனைவருக்கும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே! இப்போதே இந்த நிலை என்றால் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் அமலானால் அதிகளவில் உணவு பொருட்களை தேக்கி வைக்கவும், அதிக விலைக்கு விற்கவும் முடியும்” என கூறியுள்ளார்.

மேலும் இனியாவது தமிழக அரசு வேளாண் சட்டங்களை செயல்படுத்தாமல், வெங்காய உற்பத்தியை அதிகரித்து அனைவருக்கும் குறைந்த விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்