பட்டாசுக்கான தடையை மறுபரிசீலனை பண்ணுங்க! – 4 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

வெள்ளி, 15 அக்டோபர் 2021 (13:54 IST)
காற்று மாசுபாடு உள்ளிட்ட காரணங்களால் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா, காற்று மாசுபாடு உள்ளிட்ட காரணங்களால் டெல்லி, ராஜஸ்தான், ஒடிசா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசுகள் விற்க மற்றும் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பிரச்சினைக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் 4 மாநில அரசுகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் “காற்று மாசுபாடு உள்ளிட்ட சுற்றுசூழல் பாதிப்பை தடுப்பதற்காக தங்கள் அரசு பட்டாசுகளுக்கு தடை விதித்திருப்பது புரிகிறது. அதேசமயம் முழுதாக பட்டாசுகளை தடை செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தலின் பேரில் சுற்றுசூழலுக்கு பாதகமில்லாத பசுமை பட்டாசுகளும் தயாரிக்கப்படுகின்றன. அவற்றால் சுற்றுசூழலுக்கு பாதகமில்லை என்பதால் இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்