முதல்வர் - ஆளுநர் சந்திப்பில் நடந்தது என்ன?

சனி, 27 நவம்பர் 2021 (12:38 IST)
நீட் தேர்வுக்கு விலக்க கோரும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஸ்டால்ன் ஆளுநரிடம் கோரினார்
 
சென்னையில் உள்ள ராஜ்பவனில் காலை 11 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.  இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார் என தகவல் வெளியானது. 
 
ஆனால் இந்த சந்திப்பின் போது நீட் தேர்வுக்கு விலக்க கோரும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஆளுநரிடம் கோரினார். நீட் மசோதாவை உடனடியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ஆளுநருக்கு முதல்வர் வலியுறுத்தியுள்ளார். 
 
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்