பள்ளி செல்லும் குழந்தைகள், அதிகரிக்கும் கொரோனா: அமைச்சர் அட்வைஸ்!

வெள்ளி, 24 ஜூன் 2022 (11:26 IST)
குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், தொண்டை எரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல். 

 
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,063 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,64,131 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 567 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 497 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,946 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தினந்தோறும் தமிழகத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்பில் 50% சென்னையில் மட்டுமே பதிவாகி வருகிறது. 
 
அதுமட்டுமின்றி சென்னையை சுற்றியுள்ள செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகமாகப் கொரோனா பதிவாகியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா அதிகரிப்பு குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 
 
சென்னையில் கொரோனா பாதிப்பு 10 - 15% அளவிற்கு மட்டுமே உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா உயர்ந்தாலும் கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வரும் யோசனை அரசுக்கு தற்போது இல்லை. குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும்போது கொரோனா அறிகுறி இருக்கிறதா? என கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், தொண்டை எரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்