அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவத்தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பருவத்தேர்வு கட்டணத்தை உயர்த்த கூடாது என மாணவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் சிண்டிகேட் கூடி முடிவெடுக்கும் வரை கட்டணம் உயர்த்தப்படாது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது>
அப்போதே தேர்வு கட்டண உயர்வை நான் நிறுத்தி வைத்தேன். இந்த ஆண்டு மீண்டும் பருவத்தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியானதில் கிராமப்புற மாணவர்கள் பலரும் கவலை அடைந்த நிலையில், கட்டண உயர்வை நிறுத்தக்கோரி கோரி மாணவர்கள் சார்பில் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தன.