இன்று அவர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு பரவுவதை தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.