கொரோனாவுக்கு தடுப்பு மருந்து: எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை சாதனை

புதன், 22 ஏப்ரல் 2020 (11:01 IST)
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து:
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளதாக எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதனால் விரைவில் கொரோன தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது
 
அமெரிக்காவின் தடுப்பு மருந்து நிறுவனத்தோடு இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாகவும், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு அடுத்த கட்டத்திற்கு செல்லும்பட்சத்தில், தடுப்பூசி மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்றும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷைய்யன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். ரிவர்ஸ் வேக்ஸினாலஜி என்ற முறையில் கொரோனா வைரஸை தடுக்கும் புரதம் கண்டுபிடிக்கபப்ட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் மில்லியன் கணக்கான டாலர்களை செலவு செய்து வரும் நிலையில் தமிழகத்தின் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முதல்கட்ட வெற்றி அடைந்துள்ளது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்