மழை பாதிப்பு : சென்னையில் மருத்துவ வசதி பெற தொலைபேசி எண்கள் அறிவிப்பு
ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (13:43 IST)
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சேவை வழங்கு வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மருத்துவர்கள் வந்துள்ளனர். இவர்களை தொடர்பு கொண்டு மருத்துவ வசதி பெற தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட சென்னை முற்றிலுமாக முடங்கி கிடக்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரணாங்களும், மீட்பு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் தொடர்ந்து உதவி செய்து வருகின்றனர். பல பகுதிகளில் மருத்துவ உதவிகள் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய் உண்டாகும் அபாயமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் டாக்டர்கள் பலர் தானாக முன்வந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் தொடர்ந்து உதவிகளை செய்து வருகின்றனர். இவர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது,
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சேவை வழங்கி வரும் மருத்துவர்களின் எண்கள்.