திரையரங்குகள், கலை அரங்குகள் ஏசி அரங்குகள் மருத்துவமனைகள் ஆகியவற்றில் இருப்பவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.