கொரோனாவோடு கூட்டு சேரும் மலேரியா, டெங்கு! – மழை சீசனால் அபாயம்!

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (13:00 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் தற்போது மழைக்காலம் தொடங்குவதால் மலேரியா, டெங்கு அபாயங்களும் ஏற்பட உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்க உள்ளது மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் பருவமழை காலங்களில் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டனர். தற்போதும் இதுபோன்ற காய்ச்சல்கள் ஏற்படலாம் என கூறப்படும் நிலையில் கொரோனா உள்ள நிலையில் காய்ச்சல் ஏற்பட்டால் அவர்களுக்கு எளிதில் கொரோனா பரவி விடும் அபாயமும் ஏற்படலாம் என்பதால் இதுகுறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மருத்துவ நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்