ஆதார் போல் தமிழ்நாடு மக்களுக்கு தனி ஐ.டி: தமிழக அரசு

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (16:13 IST)
இந்தியா முழுவதும் அடையாள அட்டையாக ஆதார் கார்டு இருக்கும் நிலையில் தமிழக அடையாள அட்டையாக மக்கள் ஐடி என்ற அடையாள அட்டை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
இது குறித்த பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அடையாள அட்டையாக 10 முதல் 12 இலக்க ஐடி ஒன்று கொடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் வசிக்கும் உள்ளூர் மக்கள், வெளியூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு மக்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்ள இந்த அடையாள அட்டை உதவும் என்றும் அதுமட்டுமின்றி அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு இந்த அடையாள அட்டை பயன்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்