இந்த நிலையில், மதுரை மாநகர் வைகை ஆற்றுப் பகுதியில் உள்ள கல் பாலத்தில் நேற்றிரவு பள்ளி மாணவர் ஒருவரை 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சரமாரியாக தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்,இந்த வீடியோ காட்சியை அடிப்படையாகக் கொண்டு செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியை தொடர்ந்து, மதுரையிலும் பள்ளி மாணவர்களுக்கிடையே, ஏற்படும் மோதல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது சக மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.