மதன் திருப்பூரில் உள்ள வர்ஷாவின் வீட்டில் இருப்பதை மோப்பம் பிடித்த போலீசார் திங்கட்கிழமை அதிகாலை அவரது வீட்டுக் கதவை தட்டியுள்ளனர். போலீசார் வந்து விட்டதை அறிந்த மதன், அப்போது குளியல் அறையில் இருந்துள்ளார்.
எனவே, அவசரமாக வர்ஷாவின் பாவாடையை லுங்கி போல் கட்டிக் கொண்டு ரகசிய அறைக்குள் சென்று பதுங்கி உள்ளார். போலீசாரின் விசாரணையில், மதன் அங்கு பதுங்கியிருப்பதை வர்ஷா கூறிவிட்டார்.
அதன்பின் போலீசார் அந்த அறைக்கு சென்று, பதுங்கியிருந்த மதனை கைது செய்தனர். போலீசார் கைது செய்த போது, மதன் பெண்கள் அணியும் நைட்டி உடையில் இருந்ததாக முதலில் செய்திகள் வெளியானது. தற்போது அவர் பாவாடைதான் அணிந்திருந்தார் என்பது தெரியவந்துள்ளது.