மக்களின் காலில் விழுந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

வெள்ளி, 24 ஜூன் 2016 (14:21 IST)
கரூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த வேட்பாளர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காலில் விழுந்து நன்றி கூறியிருக்கிறார். 


 

 
மேலும், போக்குவரத்து துறை அமைச்சர் நடைபயணமாக சென்று வாக்களித்த மக்களிடம் நன்றி சொல்லியதோடு, அங்கேயே மக்கள் குறைகளை கேட்டு மனுக்களையும் பெற்றார்.
 
கரூர் சட்ட மன்ற உறுப்பினரும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சருமான  எம் ஆர் விஜயபாஸ்கர்  தான் வெற்றி பெற்ற கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கமேடு, புதுகுளத்துபாளையம், அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடு வீடாக நடந்து சென்று வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
 
அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசும் போது.. தாந்தோனி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில்  பாதுகாக்கபட்ட காவேரி கூட்டு  குடிநீர்  கிடைக்கவும்  கரூர் நகராட்சி பகுதிகளில் 8 கோடி ரூபாய் செலவில் தார் மற்றும் சிமெண்ட் சாலைவசதி   அமைக்கப்படும் என்றார். 


 

 
மேலும் தமிழக அரசின் முக்கிய திட்டங்கள் பற்றி மக்கள் மத்தியில் எடுத்து  கூறினார். நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான  கட்சி தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.. 
 
மேலும் போக்குவரத்து துறை அமைச்சர் நடைபயணமாகவே, அதுவும் வெயில் என்றும் பாராமல், நடந்தே சென்று அனைத்து தரப்பு மக்களிடம் நன்றிகளை தெரிவிக்கும் போது அவரது பழைய பாணியில் மீண்டும் வாக்களித்த மக்கள் காலில் விழுந்த காட்சி அனைவரையும் கவர்ந்தது. 
 
ஏராளமான பெண்கள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஆரத்தி தட்டுகளுடன் ஆசிர்வாதம் வழங்கிய போது அங்கேயே அவர்களது குறைகளையும் கேட்டு அதை உடனடியாக நிவர்த்தி செய்வோம் என்றும் கூறி உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர் – கரூர் மாவட்டம்

வெப்துனியாவைப் படிக்கவும்