காற்றழுத்த தாழ்வு காரணமாக மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்