’தர்பார் படம் நஷ்டம்’.... சமூக வலைதளத்தில் அழகிரி ’டுவீட் ‘

சனி, 1 பிப்ரவரி 2020 (17:03 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தர்பார். இப்படம் நல்ல வசூல் சாதனை படைத்திருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தர்பார் திரைப்படத்தை 65 கோடி ரூபாய்க்கு வாங்கி நஷ்டம் அடைந்ததாகவும் இதற்கான ரஜினி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும்  விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ரஜினியின் நண்பவரும் முன்னாள் திமுக பிரமுகருமான மு.க. அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில், நஷ்ட ஈடு கேட்பவர்கள் ஆபீஸ் ரூம் வரவும் என பதிவிட்டுள்ளார்.
 
சில வருடங்களுக்கு முன் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் ஆபீஸ் ரூம் வரவும் என்பது போன்ற காட்சிகள் வெகு பிரசித்தம். அதை அழகிரி டுவீட் செய்துள்ளது இணையதத்தில் பேசு பொருளாகி உள்ளது.
 
மேலும் அவர் தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், 
நண்பர் #ரஜினி க்கு
கொலைமிரட்டல் விடுத்த
#திக பிரமுகர்களை
வன்மையாக கண்டிக்கிறேன்!
இது போன்ற மிரட்டல்களை
இனி 'மன்னிக்க' முடியாது என தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்