தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்; இன்று மாலையுடன் நிறைவடைகிறது பிரச்சாரம்!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (14:27 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து வரும் நிலையில் இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்த நிலையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் நாளை மறுநாள் 9ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதனால் அரசியல் கட்சிகள் அனைத்து பகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்