என்னோட புத்தகத்தை அங்க அனுப்பிடுங்க..! – கி.ராவின் கடைசி ஆசை!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (17:14 IST)
தமிழ் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைந்த நிலையில் அவரது கடைசி விருப்பம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் இலக்கிய சூழலில் பல நெடுகாலமாக பல்வேறு சிறுகதைகள், நாவல்கள் உள்ளிட்ட பல படைப்புகளை கொடுத்தவர் கி.ராஜநாராயணன். சாகித்ய அகாதமி விருது வென்ற எழுத்தாளரான கி.ரா தனது 99 வயதில் உடல்நல குறைவால் காலமானார்.

அவரது மறைவிற்கு பலர் இரங்கல்கள் தெரிவித்து வரும் நிலையில் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி காரியங்கள் செய்யவும், அவருக்கு தமிழக அரசு செலவில் சிலை அமைக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் அவர் எழுதி சாகித்ய அகாடமி விருது வென்ற “கோபல்லபுரத்து மக்கள்” மற்றும் கோபல்ல கிராமம் ஆகிய நூல்களை ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு அனுப்ப அவர் விரும்பியதாக கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்