கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த் அவர்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை தோற்கடித்தார். இந்நிலையில் இவருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியம் ஆன குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தம்பி எனக் கூற அவரும் பதிலுக்கு நன்றி சகோதரி எனக் கூறியுள்ளார்.