கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கடந்த 12-ஆம் தேதி, மதுரை நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து சாத்தூரில் வந்த போது கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமியை இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
இந்நிலையில் ரஃபிக்கின் மனைவியுடைய தோழியான மகாலட்சுமி என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஓ.மேட்டுப்பட்டி அருகே உள்ள குளத்தில் சுட்டுக்கொல்ல பயன்படுத்திய தூப்பாக்கியை வீசியதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து அக்கிராம மக்கள் உதவியுடன் குளத்தில் இருந்த துப்பாக்கியை போலீஸார் கண்டெடுத்தனர்.