கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகள் எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுகிழமை பொது முடக்கத்தை முன்னிட்டு சனிக்கிழமையே காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் அதிக அளவில் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியது.