கரூர் மாவட்ட சாரண- சாரணிய இயக்கம்

வியாழன், 29 டிசம்பர் 2022 (22:48 IST)
சர்வதேச பன்னாட்டு கலாச்சார ஜாம்புரி நிகழ்வு கர்நாடக மாநிலத்தில் மூடுபித்ரியில் உள்ள ஆல்வா கல்லூரி குழுமத்தில் கடந்த21/12/2022 முதல் 27/12/2022 ஏழு நாள்களாக நடைப்பெற்றது.

இதில் கரூர் மாவட்டம் சார்பாக. அரசு மற்றும் தனியார் பள்ளியைச்சார்ந்த 38 சாரண மாணவர்களும் 36 சாரணிய மாணவர்களும்14 சாரண/சாரணிய ஆசிரியர்களும் 88 பேர் பங்கு பெற்றார்கள்*. இவர்களின் படைத்தலைவராக கரூர் மாவட்ட சாரணா செயலர் செ.இரவிசங்கர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டிப்பட்டி கோட்டை அவர்கள் வழிநடத்தினார். சாரணிய மாவட்ட ஆணையர் சண்முகவடிவு உடன் இருந்து ஊக்கப்படுத்தினார்*இந்நிகழ்வின் ஒரு பகுதியாக 24/12/2022 தமிழ்நாடு தினம் கொண்டியபோது சிறப்பு அழைப்பாளராக தமிழக கல்வித்துறை அமைச்சர் மற்றும் மாநில தலைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
 
அவர்களும், பள்ளிக்கல்வித்துறை ஆணையர்/ மாநில முதன்மை ஆணையர்  திரு. நந்தகுமார்
 
இ.ஆ. ப அவர்களும்   பள்ளிக்கல்வி இணை இயக்குநர் மற்றும் மாநில செயலர் திரு. நரேஷ்குமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 
பங்கு பெற்ற மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி பல்வேறு வகையான பதக்கங்களையும் சான்றிதழ்களை பெற்று மகிழ்ந்தனர்.
 
தங்களுக்கு மிகச்சிறந்த கற்றல் வாழ்வியல் அனுபவச் சாதனையாக இருந்தாக பங்கு பெற்ற சாரணமாணவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள் .  முதன்மை கல்வி அலுவலர் மற்றும் முதன்மை ஆணையர் திருமதி.கீதா அவர்களும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தொடக்கம்,இடைநிலை மற்றும் மெட்ரிக் ஆகியோர்களும் தாந்தோணி வட்டாரக்கல்வி அலுவலர்களும் பங்கு பெற்ற அனைவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்