கல்லூரியில் மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரம்: மாணவர்கள் போராட்டம்

புதன், 7 செப்டம்பர் 2016 (10:04 IST)
கரூரில் மாணவி கொலை செய்யப்பட்டதையடுத்து கல்லூரியில் பாதுகாப்பில்லாததை கண்டித்தும், அவசர கால ஊர்தி ஆகியவற்றைகளை செய்து தராத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவ, மாணவிகள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
 


 


கரூர் - ஈரோடு சாலையில் அமைந்துள்ளது கரூர் பொறியியல் கல்லூரி , இந்த தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 30ஆம் தேதி பட்டப்பகலில் இதே கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவன் உதயகுமார், மாணவி சோனாலியை கட்டையால் தாக்கி கொன்றுள்ளான்.

இந்த நிலையில் அந்த உயிரிழந்த சோனாலி விவகாரத்தை தொடர்ந்து கரூர் பொறியியல் கல்லூரி நிர்வாகம் ஒரு வாரம் விடுமுறை அளித்தது. ஆனால் இன்று கல்லூரியானது மீண்டும் திறக்கப்பட்டது.

ஆனால் மாணவ, மாணவிகள் கல்லூரிக்குள் செல்ல அச்சப்பட்டு, உயிரிழந்த சோனாலிக்கு மொளன அஞ்சலி செலுத்தப்பட்டு, கல்லூரியை கண்டித்தும் பெண்களுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கல்லூரியை முற்றுகையிட்டும், சோனாலியின் மரணத்திற்கு நீதி கேட்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரியில் முதலுதவிற்காகவும், எமர்ஜென்சிக்காகவும், அவசர கால ஊர்தி வசதி, பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமிரா, வாட்ச் மேன் உள்ளிட்ட 7 கோரிக்களையும், அவைகள் இல்லாததைகளை சுட்டிக்காட்டிய அம்மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களும் ஒத்துழைப்பு தந்து அவர்களும் ஆர்பாட்டத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள்
பேச்சுவார்த்தையானது சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. பின்னர் 21 நாட்களுக்குள் அனைத்து வசதிகளையும் தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் செய்து தருவதாக கூறியதையடுத்து பின்னர் அனைத்து மாணவ, மாணவிகளும் கல்லூரிக்குள் சென்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்