மிட்நைட்டில் நடந்த ரெய்டு: கறுப்பர் கூட்டம் ஆஃபீஸுக்கு சீல்!!

சனி, 18 ஜூலை 2020 (09:30 IST)
கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு இரவோடு இரவோடு சீல் வைக்கப்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றில் கந்தசஷ்டி கவசம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பல தரப்பில் கண்டனங்கள் எழுந்த நிலையில் கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரன் தாமாக முன்வந்து புதுச்சேரியில் சரண் அடைந்தார். 
 
மேலும், சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலுக்கு எதிராக புகார் அளிக்கபப்ட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கருப்பர் கூட்டம் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு சீல் வைத்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்