'சின்னத்தளபதி உதயநிதி வாழ்க': கனிமொழி முன் கோஷம் போட்ட திமுகவினர்!

வெள்ளி, 26 ஜனவரி 2018 (04:57 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்பியுமான கனிமொழி நேற்று மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது விஜயேந்திரர், திமுக மகளிர் அணி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த கனிமொழியிடம் உதயநிதி திமுகவில் இணைவது குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் கூறிய கனிமொழி, 'உதயநிதி அரசியலுக்கு வருவது குறித்து நான் கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது. அவர் கட்சியில் இணைந்து ,பொறுப்புகள் பெற்று, அரசியல் கற்றுக் கொள்வதில் தடை ஏதும் இல்லை. அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறன்.வாழ்த்துகிறேன்"என்று கூறினார். அப்போது 'சின்னத்தளபதி உதயநிதி வாழ்க என ஒருசிலர் கோஷமிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கனிமொழி உடனே அந்த இடத்தைவிட்டு கிளம்பிவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்