ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் திடீர் ஆலோசனை - பின்னணி என்ன?

புதன், 4 அக்டோபர் 2017 (13:37 IST)
நடிகர் கமல்ஹாசன் தனது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் இன்று காலை தீடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.


 

 
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே அரசு மற்றும் ஊழலுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். இதனால், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
 
ஒரு கட்டத்தில் விரைவில் தான் அரசியலுக்கு வருவதாகவும், கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை உருவாக்கும் பணிகளை தொடங்கி விட்டதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார். 
 
இந்நிலையில், இன்று காலை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, தனது அரசியல் பிரவேசம் தொடர்பான விசயங்களை அவர் விவாதித்திருக்கலாம் எனத் தெரிகிறது.
 
மேலும், தொடர்ந்து மக்கள் பணி செய்யுமாறும், முக்கியமாக டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் பணிகளில் ஈடுபடுமாறு அவர் தனது நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்