கரை வேட்டியால் தான் அரசியலில் கறை படிந்திருக்கிறது.. வெளுத்து வாங்கும் கமல்

Arun Prasath
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (11:20 IST)
சென்னை லயோலா கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் மாணவர்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியாக பல அறிவுரைகளை கூறினார்.
 
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனருமான கமல்ஹாசன்,  இன்று லயோலா கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது மாணவர்களிடையே பேசிய கமல்ஹாசன், ”கரை வேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதால் தான், அரசியலில் கறை படிந்து இருக்கிறது, மேலும் மாணவர்கள் அரசியல் பேசாமல் கல்வி விவசாயம் ஆகிய துறைகள் முன்னேறாது, ஆகையால் மாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கக்கூடாது” என கூறினார்.

மேலும் ”மொழி என்பது ஒரு கருவி தான், அதனை திணிக்ககூடாது, நாம் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை, நிர்வாகம் முடிவு செய்யமுடியாது” எனவும் கூறியுள்ளார். இந்த பேச்சு ஹிந்தி திணிப்பின் எதிர்ப்பாக பார்க்கப்படுகிறது. முன்னதாக கமல்ஹாசன் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய விவகாரம் குறித்தும், ஹிந்தி திணிப்பிற்கும் காணொலி மூலம் தனது எதிர்ப்பை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்