மதுரை ஒத்தக்கடையில் கட்சி கொடியை அறிமுகம் செய்யும் கமல்
சனி, 17 பிப்ரவரி 2018 (19:00 IST)
நடிகர் கமல்ஹாசன் தனது கட்சி கொடியை மதுரையில் வரும் 21ஆம் தேதி அறிமுகம் செய்து வைக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியை வரும் 21ஆம் தேதி தொடங்கவுள்ளார். தனது அரசியல் பயணத்தை அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தொடங்குகிறார். அன்றே அவரது முதல் அரசியல் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
ராமாநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது அரசியல் கட்சியின் கொடியை ஏற்றுக்கிறார்.
ரஜினி எப்போது வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் கமல் திடீரென அரசியலில் களமிறங்கினார். ரஜினி தனது அரசியல் பயணத்தை தற்போது அறிவித்துள்ள நிலையில் கமல் கட்சியை தொடங்கவுள்ளார்.
இருவரும் நண்பர்களாக இருந்தாலும் அரசியலில் இருவரும் வெவ்வேறு களத்தில் பயணிக்க உள்ளனர். ரஜினி ஆன்மிக அரசியலை முன்னிறுத்தி உள்ளார். கமல்ஹாசன் கட்சியின் நோக்கம் மற்றும் கொள்கை குறித்து தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வத்துடன் உள்ளனர்.