தேசியக் கொடியை ஏற்றவிடாமல் தடுக்கப்பட்ட பெண் ஊராட்சி மன்ற தலைவர்: கமலஹாசன் கண்டனம்

புதன், 19 ஆகஸ்ட் 2020 (17:47 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண் ஊராட்சி மன்ற தலைவர் தேசியக்கொடியை ஏற்ற கூடாது என தடுத்ததாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள ஆத்துபாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அமிர்தம். இவர் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர் என்பதால் இவர் கடந்த சுதந்திர தினத்தின் போது தேசியக்கொடியை ஏற்ற முயன்றபோது சிலர் தகராறு செய்து தடுத்தனர்
 
மேலும் இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களையும் அவர்கள் தாக்கினர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் தேசியக் கொடி ஏற்றும்போது தடுத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது
 
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கமலஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கும்மிடிப்பூண்டி ஆத்துப்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவர் திருமதி.அமிர்தம் அவர்களுக்கு நடந்த அநீதி, இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்.சாதிப் பிணி ஒழிய, நம் குரல்கள் ஒன்றுபடாவிட்டால் குரலற்றவர்களின் குரல்வளை நெறிக்கப்படுவது தொடரும். தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படும் வரை குரல் கொடுப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்