கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு- நீதிமன்றம் எச்சரிக்கை!

புதன், 24 ஆகஸ்ட் 2022 (19:17 IST)
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில், பள்ளி, தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் எதற்குக் கைது செய்யப்பட்டார்கள்? என  உயர்  நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அந்த மாணவியின் இரண்டு தோழிகள் இன்று நீதிபதி முன் ரகசிய வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளியானது

இந்த செய்தி குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீமதி தாயார், ‘ரகசிய வாக்குமூலம் கொடுத்த இரண்டு மாணவிகள் உண்மையில் ஸ்ரீமதி தோழிகளா என்பதை தாங்கள் அறிய வேண்டும் என்றும் அந்த தோழிகள் யார் என்பதை தங்களுக்கு குறிப்பிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

சிபிசிஐடி தங்களுக்கு அந்த தகவலை தெரிவித்தால் அந்த தகவலை நாங்கள் ரகசியமாக காத்து வைப்போம் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஸ்ரீமதிக்கும் தோழிகள்தான் வாக்குமூலம் கொடுத்தாரா அல்லது பள்ளி நிர்வாகம் செட்டப் செய்ததா என்பது குறித்தும் எங்களுக்கு தெரிய வேண்டும் என்றும் அவர் கூறினார். ஸ்ரீமதியின் தாயார் எழுப்பிய இந்த சந்தேகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கள்ளக் குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில், பள்ளி, தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் எதற்குக் கைது செய்யப்பட்டார்கள்? என  உயர்  நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் கோரிய வழக்கு விசாரணையில் மாணவி மரத்திற்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்புமில்லை என மனுதார்கள் தெரிவித்துள்ள நிலையில்,   இவர்களைக் கைது செய்ததற்காக காரணத்தை நாளை முதாள் தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரியக்ள் ஆஜராக உத்தரவிட  நேரிடும் என்று உயர் நீதிமன்றம் இன்று எச்சரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்