கலைஞரின் படைப்புலக சரித்திரத்தை போற்றுவோம்! - உதயநிதி ஸ்டாலின்

செவ்வாய், 4 ஜூலை 2023 (19:38 IST)
தமிழகத்தில், முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் பல்வேறு மக்கள் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சியை திமுக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த நிலையில்,  #கலைஞர்100 ஐ முன்னிட்டு, கலைஞரின் படைப்புலக சாதனைகளை மாண்புமிகு முதலமைச்சர்  முக.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, #கலைஞர்_கலைஞர் எனும் தலைப்பில் ஆண்டு முழுவதும் கொண்டாடவுள்ளோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’நாடகம் - இலக்கியம் - பாடல்கள் - வசனங்கள் - திரைப்படங்கள் என தமிழ் படைப்புலகின் திசைவழிப்போக்கை திருத்தி எழுதியவர் நம் முத்தமிழறிஞர் அவர்கள்.

#கலைஞர்100 ஐ முன்னிட்டு, கலைஞரின் படைப்புலக சாதனைகளை மாண்புமிகு முதலமைச்சர்  முக.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, #கலைஞர்_கலைஞர் எனும் தலைப்பில் ஆண்டு முழுவதும் கொண்டாடவுள்ளோம்.

இப்பணியை ஒருங்கிணைக்க மாண்புமிகு அமைச்சர்கள் - அரசு உயர் அதிகாரிகள் - திரைக்கலைஞர்கள் - கவிஞர்கள் உள்ளிட்ட படைப்பாளிகள் அடங்கிய குழுவினை கழக அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் முதற்கட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்று தலைமையேற்று நடத்தினோம்.

சமூகநீதியையும்- சமத்துவத்தையும் சமரசமின்றி பேசிய கலைஞரின் படைப்புலக சரித்திரத்தை போற்றுவோம்!’’ என்று தெரிவித்துள்ளார்.


நாடகம் - இலக்கியம் - பாடல்கள் - வசனங்கள் - திரைப்படங்கள் என தமிழ் படைப்புலகின் திசைவழிப்போக்கை திருத்தி எழுதியவர் நம் முத்தமிழறிஞர் அவர்கள்.#கலைஞர்100 ஐ முன்னிட்டு, கலைஞரின் படைப்புலக சாதனைகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, #கலைஞர்_கலைஞர் எனும்… pic.twitter.com/VRlsJoMnJs

— Udhay (@Udhaystalin) July 4, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்