முன்னதாக, இணையதள சேவை வழங்கும் 169 நிறுவனங்களும், கபாலி படத்தை தாங்கள் இணைய சேவை தந்துள்ள நிறுவனங்கள் கபாலியை இணையத்தில் பதிவேற்றாமல் பார்த்துக் கொள்ளும்படி தாணுவின் மனு காரணமாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதற்குப் பிறகும் முதல்நாளே படம் இணையத்தில் பதிவேற்றப்பட்டது.
இணையத்தில் கபாலி படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. ஆனால், தடையை மீறி கபாலி திரையரங்குகளில் வெளியான அரைமணி நேரத்தில் இணையதளத்தில் வெளியானது. இதை மத்திய அரசு தடுக்க ஏன் தவறியது? இதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தாணு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.