தமிழகத்தில் இரண்டு நாட்கள் கனமழை: வானிலை எச்சரிக்கை

ஞாயிறு, 24 ஜூலை 2022 (12:59 IST)
தமிழகத்தில் வரும் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது 
 
தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் ஜூலை 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
நாளை மறுநாள் வடக்கு தமிழக மாவட்டங்களிலும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும் குறிப்பாக ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஜூலை 27ஆம் தேதி நீலகிரி கோவை திருப்பூரு கிருஷ்ணகிரி தருமபுரி மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் அதேபோல் சேலம் நாமக்கல் திருச்சி கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்