பெற்றோர் தான் காரணம்.. ஆன்லைன் கேம் குறித்து நீதிபதி கருத்து!

திங்கள், 28 நவம்பர் 2022 (12:49 IST)
ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுகளை 18 வயதுக்கும் குறைவானவர்கள் விளையாடுவதற்கு பெற்றோர் தான் காரணம் என ஆன்லைன் கேம் குறித்த வழக்கில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
 
18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி போன்ற கேம்கள் விளையாடுவதை தவிர்க்கும் வகையில், செயலிகளில் உள்நுழைய வயதை உறுதி செய்யும் ஆதார் அல்லது பான் கார்டு  பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
 
மேலும் 18 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுகள் தெரியவந்தது எப்படி? அரசுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது" என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வேதனையுடன் தெரிவித்துள்ளது.
 
பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்துவிட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை; நாமே குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்து விடுகிறோம். பின்பு அரசை குற்றம் சாட்டுவது எப்படி? எனவும் நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்