சென்னையில் 6000 தெருக்களில் முழுக்கவனம் – ஜெயக்குமார் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (08:17 IST)
சென்னையில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள 6000 தெருக்களில் மட்டும் முழுக்கவனம் செலுத்த உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் சுமார் 70 சதவீதம் பாதிப்புகள் தலைநகர் சென்னையில் உள்ளன. இதனால் மக்கள் பெரும் பீதியுடன் அங்கு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் எப்படியாவது பாதிப்புகளைக் குறைக்க மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதற்கு அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ‘சென்னையில் 39,600க்கும் மேற்பட்ட தெருக்களில், 6,000 தெருக்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இது சுமார் 16 சதவீதம் ஆகும். அதனால் இந்த பகுதிகளில் முழுகவனம் செலுத்தவுள்ளோம். வீட்டில் தனிமைப்படுத்த மக்களை மாநகராட்சி மருத்துவர்கள் தினமும் தொலைபேசியில் பேசி, கண்காணித்து வருகின்றனர். மாநகராட்சி செவ்லியர்கள் தொற்று வர வாய்ப்புள்ளவர்களாக சந்தேகிக்கப்பட்டுள்ள 3,47,380 நபர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்