விஷச்சாராயம் விவகாரத்தில் காங்கிரஸ் மெளனம் ஏன்? கார்கேவுக்கு நட்டா கேள்வி

Mahendran

திங்கள், 24 ஜூன் 2024 (14:47 IST)
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் பலர் உயிரிழந்தும் காங்கிரஸ் மெளனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.
 
தமிழகத்தின் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை நீக்கவும், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கவும் தமிழக முதல்வருக்கு காங்கிரஸ் அழுத்தம் தர வேண்டும் என ஜே.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.
 
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது குறித்து திமுக கூட்டணி கட்சிகள் மௌனம் காத்து வருகின்றன என்றும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவரும் இது குறித்து வாயை திறக்கவில்லை என்றும் விமர்சனம் எழுந்து வருகிறது. 
 
இதுகுறித்து பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆவேசமாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் பெயரளவுக்கு தான் கருத்து தெரிவித்து வருகின்றன என்றும் சில கட்சிகள் மௌனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் தான் மத்திய அமைச்சர் ஜே பி நட்டா, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மௌனம் காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை செய்ய தமிழக முதல்வருக்கு காங்கிரஸ் அழுத்தம் தர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்