மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி தமிழகத்திலும் திமுக சார்பில் 23ம் தேதி அனைத்து கட்சிகள் சார்பில் பேரணி நடைபெற இருக்கிறது. இந்த பேரணியில் கலந்து கொள்ளுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் கட்சிகள் மற்றும் திரை பிரபலங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.