அரசியலில் இனி ஓபிஎஸ்க்கு எதிர்காலம் இல்லை! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (12:46 IST)
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று அதுகுறித்து நடந்த விசாரணையில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது செல்லும் என உறுதியாகியுள்ளது. இந்த தீர்ப்பை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதேசமயம் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் கட்சியை விட்டு நீக்கப்பட்டது செல்லுமா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் “நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளது, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் சேர்த்துதான். அதன்படி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக நீடிப்பார். அதேசமயம் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லும். இனி அவருக்கு அரசியல் எதிர்காலம் இல்லை” என்று பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்