எடுத்தோம் கவுத்தோம்னு பண்ண முடியாது: முட்டுக்கொடுக்கும் ஜெயகுமார்!

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (11:25 IST)
ஊரடங்கு நீட்டிப்பை தான்தோன்றி தனமாக அறிவிக்க முடியாது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டொர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஏப்ரல் 14 வரை இருக்கும் ஊரடங்கு அதன் பின்னர் நீட்டிக்கப்படுமா என்பதை பிரதமர் அறிவிப்பிற்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.   
 
இதனால் எடப்பாடி பழனிச்சாமி மீது பல் அவிமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ளார் அமைச்சர் ஜெயகுமார். அவர் கூறியதாவது, 
 
ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் தெரிவித்துள்ளார். ஊரடங்கு நீட்டிப்பை தான்தோன்றி தனமாக அறிவிக்க முடியாது. எதையும் வரைமுறையோடு செய்ய வேண்டும். அதை தான் முதல்வர் செய்து வருகிறார் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்