NDA கூட்டணியில் அமமுக உள்ளதா? டிடிவி தினகரன் விளக்கம்

வியாழன், 27 ஜூலை 2023 (21:48 IST)
என்டிஏ கூட்டணியில் இல்லை என்று இன்று அமமுக தினகரன் பேட்டியளித்துள்ளார்.

ஆளுங்கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், தேசிய ஜன நாயக கூட்டணியின் அனைத்து எபிக்களையும் பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார். வரும் ஜூலை 31 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை மாநில வாரியாக எம்பிக்களை சந்திக்கவுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்களை என்.டி.ஏ கூட்டணி எம்பிக்களை வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி சந்திக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகிறது.

இந்த நிலையில், அமமுகவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக சமீபத்தில்  ஓபிஎஸ் கூறினார். இதையே அமமுக பொதுச்செயலாளர் தினகரனும் கூறி உறுதிப்படுத்தினார்.

எனவே இவர்கள் இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார்களா? என்று கேள்வி எழுந்து வந்தது.

இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாகவும், இனிவரும் காலத்தில் அனைத்து நிகழ்வுகளிலும் இணைந்து பயணிக்க உள்ளதாகவும், என்டிஏ கூட்டணியில் இல்லை என்று இன்று தினகரன் பேட்டியளித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்