குன்றுகள் இருக்கும் இடம்தோறும் குமரன் இருப்பான் என்பது முருக பெருமான் குறித்து சொல்லப்படும் ஒரு பழமொழி. அதுபோல தமிழ்நாட்டின் பல குன்றுகளிலும், ஊர்களிலும் முருகருக்கு பல கோவில்கள் இருந்து வருகிறது. மலேசியா வரை முருகனுக்கு கோவில் உள்ள நிலையில் விதவிதமான உயரங்களில் முருகருக்கு கோவிலுக்கு அருகிலேயே சிலை அமைப்பது தற்போது அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோவில் ஒன்றிலும் சமீபத்தில் முருகருக்கு 56 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. முருகன் என்றால் அழகு என்பார்கள். அதற்கேற்றார்போல வீட்டு காலண்டர் தொடங்கி கோவில் வரை கொழுகொழு கன்னங்களோடு சிரித்த இதழோடு அழகிய முருகனை கண்டிருப்போம். ஆனால் அந்த கோவிலில் வைக்கப்பட்டிருந்த முருகன் சிலையோ உடல் வற்றி, முகம் ஒட்டி, புன்னகையற்ற தோற்றத்தில் காணப்படுகிறது.